மிழ் சினிமாவின் பெரிய பெரிய ஜாம்பவான்களான பாரதிராஜா, பாலுமகேந்திரா, வி.சேகர் உட்பட பல இயக்குநர்களின் படங்களில் நடித்தவர் விக்னேஷ்.

Advertisment

vignesh

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் 51 படங்களில் நாயகனாக நடித்தவர் தனது 52-ஆவது படமான "ஆருத்ரா'-வில் கொடூரமான வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார்.

ஏன் இந்த வில்லன் வேஷம்?

""எனக்கு சினிமா மோகம் அதிகம்.

தூங்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்கள் எல்லாமே சினிமாதான்.

பெரிய இயக்குநர்கள் படங்களில் நடித்தும் எனக்கென்று ஒரு பிரேக் வரவில்லையே என்கிற ஏக்கம் எனக்கு உண்டு. அதற்காக நான் சோர்ந்து போய்விடவில்லை.

Advertisment

சொந்தமாகத் தொழில் செய்து அதில் முன்னேறி இருக்கிறேன். பா. விஜய்யும் நானும் நண்பர்கள். ஒருநாள் ஒரு கதையைச் சொல்லி என்னை நடிக்கக் கேட்டார். படத்தோட டப்பிங் முடிச்சிட்டு யோசிச்சேன். இவ்வளவு கொடூரமான வில்லனாகவா நடிச்சோம் என்று.

படத்தில் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் செய்கிற மாதிரி காட்சியை எடுத்த இயக்குநர் அதை கட் செய்தது எனக்கு வருத்தம்தான்.

"சேது' படத்தில் நீங்கள் நடிப்பதாக இருந்து அது மிஸ் ஸான காரணம்?

""அதை நினைத்து தினமும் வருத்தப்படுவேன். பாலா வும் நானும் ரூம் மேட்ஸ். பல பிரச்சினைகளை சந்தித்ததால் நான் நடிக்க முடியாமல் போச்சு. என் நண்பன் ஜெயிச்சி தலைநிமிர்ந்து இருக்கிறது எனக்குப் பெருமையா இருக்கு.

Advertisment

"சேது' மாதிரி பாலுமகேந்திரா வின் "வண்ணவண்ண பூக்கள்' படமும் ஏழு நாட்கள் நடிச்சபிறகு மாற்றப் பட்டேன். அந்த வலியெல்லாம் இன்னும் போகல. போராடிட்டே இருப்பேன். நிச்சயம் ஜெயிப்போம்''.